
வணக்கம் திருக்கவி.காம் இணையத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். பாறைக்குள்ளேயே காலந்தள்ளும் தேரை போல
கவிதைகள் காலந்தள்ளுவது அழகல்ல, சுதந்திர வானின் சூரியன் போல எல்லோரும் காணும் நிலையில் இருப்பதே கவிதைக்கு அழகு. எனவே தான் எனது கவிதைகளைத் தொகுத்து முதலில் புத்தகமாக வெளிட்டேன். இப்போது அந்தக் கவிதைகளை இப்போது இணையத்திலும் வெளியிடுகிறேன். உயிர் வலிக்கும் உணர்வுகளால் எழுதிய கவிதைகளும் உண்டு. களம் எதுவாயின் கவிதை வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் அதை சுவாசிக்கும்.
நடந்து பார் அப்போது தான் உன் தடம் உனக்காவது தெரியும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் எனது கவிதைகள் இந்த இணையதளத்தில் பதித்துள்ளேன். எனது இந்த கவிதைகளை வாசித்து இன்புற காத்திருக்கும் உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அன்பு வாசகர்களே,என் கவிதை மீதான தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத் தந்து உதவுவீர்களால் எதிர்கால படைப்பை இன்னும் செழுமையாக்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என்ற கருத்தை தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.